மதுரை திருப்பரங்குன்றம் மலைமீது அசைவ விருந்து தயார் செய்ய சென்ற இஸ்லாமிய அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் அசைவ விருந்து நடத்த இஸ்லாமிய அமைப்பினர் ஆடுகளுடன் மலை மீது ஏற முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மலை மீது அசைவ விருந்து சமைக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர்.
மேலும், தர்காவில் தொழுகைக்கு மட்டுமே அனுமதி என போலீசார் திட்டவட்டமாக கூறினர். இதனால் இஸ்லாமிய அமைப்பினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.