ஈரோட்டில் மின்கசிவு காரணமாக கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆயிரக்கணக்கான கோழிகள் தீயில் கருகி இறந்தன.
வில்லரசம்பட்டி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவர், அதே பகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் மின்கசிவு காரணமாக நேற்றிரவு கோழிப்பண்ணை தீ பற்றி எரிந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.