ரஷ்யா-உக்ரைன் போரில் 16 இந்தியர்களை காணவில்லை என்றும், 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், உக்ரைனில் கேரளாவை சேர்ந்த இந்திய ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என தெரிவித்தார்.
ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 126 இந்திய ராணுவ வீரர்களில் 96 பேர் நாடு திரும்பியுள்ளதாக கூறினார். மேலும், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 16 ராணுவ வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரிவில்லை எனக்கூறிய அவர், ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 12 இந்தியர்கள் இறந்துவிட்டதாக குறிப்பிட்டார்.