அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்று முதலிடம் பெற்ற பாகுபலி காளைக்கு, சொந்த ஊரான சேலம் அயோத்தியபட்டினத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த 16ஆம் தேதி நடைபெற்றது.
இதில், சேலம் அயோத்தியாபட்டினம் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்பவரின் பாகுபலி காளை, முதலிடம் பிடித்து வெற்றி பெற்றது.
டிராக்டர், சைக்கிள், மாடு மற்றும் கன்று குட்டி ஆகியவை பாகுபலி காளையின் உரிமையாளருக்கு பரிசாக வழங்கப்பட்டன.
இந்த நிலையில் பாகுபலி காளை மற்றும் அதன் உரிமையாளர் உள்ளிட்டோர் சொந்த ஊரான சேலம் அயோத்தியாபட்டினத்திற்கு வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காளைக்கு மாலை அணிவித்தும், பட்டாசுகள் வெடித்தும், தாரை தப்பட்டை மற்றும் மேள தாளம் முழங்க பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.