இன்ஸ்டாகிராமில் பிரபலமான இருவர் விமானத்தில் சத்தமாக ஸ்பீக்கர்களை ஒலிக்கச் செய்த சம்பவம் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது.
டெல்லியைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சர்களான வருண் யாதவ் மற்றும் ஆருஷ் போலா ஆகியோர் விமானத்தில் பயணித்துள்ளனர்.
அப்போது சக பயணிகளை பற்றி கவலை கொள்ளாமல், விதிமுறைகளை மீறி ப்ளூடூத் ஸ்பீக்கர்களை விமானத்தில் சத்தமாக ஒலிக்கச் செய்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் அவர்களின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.