தூத்துக்குடியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது மயங்கி விழுந்த நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த ஜான்சன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் மீளவிட்டான் பகுதியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஜான்சன் மயங்கி விழுந்துள்ளார்.
தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஜான்சன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.