கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு - அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!
Jan 14, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள் : குறட்டை விட்டு தூங்கும் திமுக அரசு – அன்புமணி ராமதாஸ் விமர்சனம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Jan 19, 2025, 11:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாகவும். திமுக அரசு  குறட்டை விட்டு தூங்கும் மர்மம் என்ன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : “பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்குச் சென்று திரும்பும் மக்களிடம் தனியார் ஆம்னி பேருந்துகள் வரலாறு காணாத கட்டணக் கொள்ளையை நடத்தி வருகின்றன. பொங்கல் திருநாளுக்கு சொந்த ஊருக்கு செல்வதற்காக வசூலிக்கப்பட்டக் கட்டணத்தை விட மிக அதிகமான கட்டணம் சென்னைக்கு திரும்பி வருவதற்காக வசூலிக்கப்படும் நிலையில், இந்தக் கட்டணக் கொள்ளையை தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு  குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பததாக குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரையிலிருந்து சென்னைக்கு அதிகபட்சமாக ரூ.3950 கட்டணம் நிர்ணயிக்கப்படுள்ளது. நெல்லையிலிருந்து சென்னைக்கு ரூ.4500, கோவையிலிருந்து சென்னைக்கு ரூ.5,000, நாகர்கோயிலில் இருந்து ரூ.3,899 கட்டணம் வசூலிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து முன்பதிவுக்கான இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவை அனைத்தையும் விட குறைந்த தொலைவு கொண்ட திருச்சியிலிருந்து சென்னைக்கு வருவதற்கு ரூ.4000 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது இயல்பாக அரசுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை விட 6 முதல் 8 மடங்கு வரையிலும், தனியார் பேருந்துகளின் கட்டணத்தை விட 4 முதல் 6 மடங்கு வரையிலும் அதிகமாகும்.

தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அதைத் தடுக்க வேண்டிய முதல் கடமை அரசுக்குத் தான் உள்ளது. ஆனால், அந்தக் கடமையை நிறைவேற்றுவதில் தமிழக அரசு முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. வழக்கம் போலவே பொங்கல் திருநாளுக்கு முன்பாக, அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவேசமான வசனங்களுடன் தமிழக அரசிடமிருந்து அறிக்கை வந்தது.

அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் குறித்து 1800 425 6151, 044-24749002, 044-26280445, 044-26281611 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்த எண்களை தொடர்பு கொண்டால், “நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் உங்கள் அழைப்பை ஏற்கும் நிலையில் இல்லை.அதனால் சிறிது நேரம் கழித்து தொடர்பு கொள்ளவும்’’ என்று மட்டுமே பதில் கிடைத்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து ஆணையர் ஷன்சொங்கம் ஜடாக் சிரு உள்ளிட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டிய அரசும், அதிகாரிகளும் எந்த அளவுக்கு விழிப்புடன் செயல்படுகிறார்கள் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். கட்டணக் கொள்ளை குறித்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்ட பிறகு தமிழக அரசின் சார்பில் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கண் துடைப்பு அறிவிப்பு வெளியாகும்.

கட்டணக் கொள்ளையில் ஈடுபட்ட பேருந்துகள் மீது எவ்வளவு அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் சராசரியாக ஒரு பேருந்துக்கு ரூ.1750 மட்டும் தான் வசூலிக்கப்பட்ட்டிருக்கும். ஒரு பயணியிடம் ரூ.5000 என்ற அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்தும் பேருந்துகளிடம் ரூ.1750 மட்டும் அபராதம் வசூலிக்கப்பட்டால், தனியார் பேருந்துகள் எவ்வாறு திருந்தும்? கட்டணக் கொள்ளையை எவ்வாறு தடுக்க முடியும்? கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்காமல், கட்டணக் கொள்ளைக்கு திமுக அரசு துணை போவது ஏன்?

தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களைக் காப்பது அல்ல. இதை உணர்ந்து கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பல முறை அளித்தத் தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணத்தை தமிழக அரசே நிர்ணயிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Tags: கொள்ளையடிக்கும் ஆம்னி பேருந்துகள்Pongal holidaysanbumani ramadossomni busespmk anbumani ramadossanbumani ramadoss latestanbumani ramadoss press meetanbumani ramadoss latest speech todayanbumani ramadoss pmkdr. anbumani ramadossOmni buses ticket price issue
ShareTweetSendShare
Previous Post

சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவர் யார்? – காவல்துறை விளக்கம்!

Next Post

சிறப்பாக செயல்படும் தமிழக ஆளுநரை ஏன் மாற்ற வேண்டும்?- அண்ணாமலை கேள்வி!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies