மயிலாடுதுறையில் 2 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் பாரத் ராஷ்ட்ரிய நிர்மான் வித்யார்த்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தருமபுரம் ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க இந்த திட்டம் வழிவகை செய்கிறது. கர்நாடகாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அறக்கட்டளை இந்த நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.
தருமபுரம் ஆதீன கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் கலந்துகொண்டனர்.