திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பெண் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேரிடம் நகை பறிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகத்தில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலம் நிலவுவதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள், ஆட்சியாளர்களின் கையாலாகா தனத்தை காட்டுவதாகவும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.
பெண் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாதது வெட்கக்கேடானது என தெரிவித்துள்ள அவர், தமிழக அரசு சுய விளம்பரங்களில் செலுத்தும் கவனத்தை, சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதிலும் செலுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.