தமிழக பாஜக மாவட்ட தலைவர்கள் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் இருந்து, பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை துவங்கியது. பின், நவம்பரில், உள்கட்சி தேர்தல் துவங்கியது. முதல் கட்டமாக, கிளை அளவில் தேர்தல் நடத்தி, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
அடுத்து, மண்டல தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். தொடர்ந்து, மாவட்ட தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது. அதில் முதற்கட்ட மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று வெளியானது.
அதன் விவரம் வருமாறு :
சேலம் – சசிகுமார்
நெல்லை – முத்து பலவேசம்
தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
சிவகங்கை – பாண்டித்துரை
நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு – சரவணன்
விருதுநகர் கிழக்கு – பென்டகன் ஜி பாண்டுரங்கன்
திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்
திருப்பத்தூர் – எம் தண்டாயுதபாணி
கடலூர் மேற்கு – க.தமிழழகன்
கடலூர் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி
நீலகிரி – தர்மன்
மயிலாடுதுறை – நாஞ்சில் கே.பாலு
அரியலூர்- டாக்டர்.பரமேஸ்வரி
காஞ்சிபுரம் – ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு – மருத்துவர் பிரவீன் குமார்
கன்னியாகுமரி மேற்கு – ஆர் டி சுரேஷ்
கன்னியாகுமரி கிழக்கு – கோப்பு குமார்
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
தேனி -ராஜபாண்டியன்
திருச்சி – ஒண்டிமுத்து
புதிய மாவட்ட தலைவர்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.