நெல்லையில் சிறு வீட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம் - சிறப்பு தொகுப்பு!
Sep 8, 2025, 08:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லையில் சிறு வீட்டு பொங்கல் உற்சாக கொண்டாட்டம் – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 19, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லையில் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு பெண் குழந்தைகள் சிறு வீட்டு பொங்கல் கொண்டாடினர்.

பெண் குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ என எத்தனையோ பழக்க வழக்கங்களையும் ஹேஷ்டேக்குகளையும் பதிவிட்டு வருகிறோம். ஆனால் தமிழர்கள் சங்க காலத்தில் இருந்தே பெண் குழந்தைகளைப் பெருமைப்படுத்தி, கொண்டாடியிருக்கிறார்கள்.

இதற்குச் சான்றாக தமிழில் பல இலக்கியங்கள் இருந்தாலும் தென் மாவட்டங்களில் தைப்பொங்கலையொட்டி கொண்டாடப்படும் `சிறுவீட்டுப் பொங்கல்’ தமிழர்கள் பெண் குழந்தைகளைக் கொண்டாடும் விதத்தை கண் முன்னே விவரிக்கிறது.

பெண் குழந்தைகள் அழகுப் பதுமைகளாக குட்டி, குட்டி சொப்புச் சாமான்களில் கற்பனையேற்றி சமைப்பதை எண்ணிப்பார்க்காமல் அவர்களின் குழந்தைப் பருவத்தை நம்மால் கடக்க இயலாது.

அப்படியான அவர்களின் வழக்கத்தை விழாவாக மாற்றியிருக்கிறது தமிழ் சமுகம். தனக்கென களிமண் வீடுகட்டி, அந்த வீட்டில் பெண் குழந்தைகள் பொங்கல் இடும் அந்த வழக்கம் எப்படி உருவானது, எப்படி மருவியிருக்கிறது என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

தென் மாவட்டங்களில் பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் கொண்டாடப்படும் சிறு வீட்டுப் பொங்கல், அந்தக் காலத்தில் ஆண்டாளின் மார்கழி நீராடலை அடிப்படையாகக் கொண்டு, விரதம் முடிக்கும் தைப் பூசம் அன்று கொண்டாடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

அதாவது, “மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளில்” – மார்கழி மாதம் பெளர்ணமி அன்று தொடங்கி, தை மாதம் பெளர்ணமி அன்றுதான் ஆண்டாளின் நோன்பு முடிவடைகிறது. தைப்பூச தினமான அந்த நாளில் பொங்கல் இட்டு , தனக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைய பெண் குழந்தைகள் இறைவனை வழிபட்டிருக்கிறார்கள்.

அதன் பின் அதில் மாற்றங்கள் நிகழ்ந்து தற்போது சிறுவீட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதே போன்று பெண் குழந்தைகள் மணலில் கட்டி விளையாடும் வீட்டை ஆண் குழந்தைகள் உடைத்துவிடுவார்கள். இதை `சிற்றில் சிதைத்தல்’ என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

இப்படி பெண் குழந்தைகள் வீடு கட்டி விளையாடிய நிகழ்வே நாளடைவில் பொங்கலுடன் இணைந்து சிறு வீட்டுப் பொங்கலாகக் கொண்டாடப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. மாற்றங்கள் நிகழ்ந்திருந்தாலும் தற்போதும் சிறு வீட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

பிறகு ஊரில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்று சாணக் குப்பிகளை முதலில் தண்ணீரில் கரைத்து விடுவார்கள். அதன் பின் இலையை அப்படியே தண்ணீரல் விட்டு இறைவனுக்கு நன்றி சொல்லித் திரும்புவார்கள். இப்போது ஆற்றங்கரையில் தண்ணீர் இல்லாததால் குளம், ஏரிக்கரை என நீர் உள்ள பகுதிகளில் கரைக்கிறார்கள்.

இப்படி ஒவ்வொரு வருடமும் செய்தால் அந்தப் பெண் குழந்தையின் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பது ஐதீகம்” என்கிறார்கள். இப்படியான சாஸ்திர சம்பிரதாயங்களின் பின்னணியில் பெண் குழந்தைகள் கொண்டாடப்படுகிறார்கள் என்பதே நாம் அறிய வேண்டிய ஒன்று.

தை மூன்றாம் நாள், வீட்டு முற்றத்தில் ஐந்துக்கு ஐந்தடி அளவில் களிமண்ணால் சிறிய வீட்டை, பெண் குழந்தைகள் கட்டுவார்கள். அந்த வீட்டில் வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து, அவருக்கு பூ, தேங்காய், பழம் படைப்பார்கள். களிமண் வீட்டில் சிறிய அடுப்பு, பாத்திரம் ஒன்றை வைத்து அதில் பால் காய்ச்சி அந்த வீட்டை தனதாக்கிக் கொள்வார்கள். பால் பொங்கி வழிந்ததும், கிழக்கே பார்த்து, வெண்கலப் பானையில் சர்க்கரைப் பொங்கல் இடுவார்கள்.

கும்மி முறத்தில் வாழை இலை விரித்து அந்த இலையில் மஞ்சளால் ஆன பிள்ளையார், முளைகட்ட வைத்த நவதானியங்கள், மாதம் முழுவதும் சேகரித்த சாணக் குப்பிகள், தேங்காய், பழம், வைத்து விளக்கேற்றி, ஒரு வீதியில் இருக்கும் சிறுமிகள் ஒன்றாக இணைந்து, “வாடாமல், வதங்காமல் வளர்த்தேனடி குப்பி, நீ பரணி ஆத்து தண்ணியில போறியேடி குப்பி” என்று கும்மியடித்து வழிபடுவார்கள்.

இந்நிலையில்  பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்ட அவர்கள், சிறிய பானையில் பொங்கலிட்டு மகிழ்ந்தனர். பின்னர் குழந்தைகள் ஒன்றுகூறி பொங்கலை படையலிட்டு வழிபட்டனர்.

Tags: Margazhi TingalNellaipongalsiru veedu pongal celebration
ShareTweetSendShare
Previous Post

பாஜக புதிய மாவட்ட தலைவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து!

Next Post

சென்னையில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது!

Related News

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

ரிதன்யா தற்கொலை வழக்கின் விசாரணை – சிபிஐக்கு மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு!

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக MLA-க்கள் நிதியில் கட்டிய ரேஷன் கடைகள் மூடல் – திமுகவினரின் கார் பார்க்கிங் ஆக மாறியதால் அதிர்ச்சி!

முக்கியத்துவம் பெற்ற குடியரசு துணை தலைவர் தேர்தல்!

விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரை விரட்டிய யானை!

ராணிப்பேட்டை : இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை!

பெருமையை இழக்கும் ஈத்தாமொழி தேங்காய்கள் : வேதனையில் விவசாயிகள்!

ராணுவ வீரர்களுக்கான பயிற்சி நிறைவு விழா – வியக்க வைத்த சாகச நிகழ்ச்சி!

கர்நாடகா : போராட்டத்தில் ஈடுபட்ட இந்து அமைப்பினர் மீது போலீசார் தடியடி!

கோவை : கிழக்கு புற வழி சாலைக்கு எதிர்ப்பு – ஆட்சியர் அலுவலகம் முற்றுகை!

நேபாளம் : இந்திர ஜாத்ரா திருவிழாவையொட்டி தேர் ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies