மதுரையில் பாஜக நிர்வாகியின் குழந்தைக்கு பெயர் வைத்து, மாமன் முறைக்கான மோதிரத்தை அணிவித்து பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மதுரை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார். அப்போது தனது ஆண் குழந்தைக்கு பெயர் வைப்பதற்காக பாஜகவின் மாநில தொழில் நுட்ப பிரிவு செயலாளர் விஷ்ணு பிரசாத் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
விஷ்ணு பிரசாத்தின் ஆண் குழந்தைக்கு ஆதிஸ் என பெயர் சூட்டிய அண்ணாமலை குழந்தையின் நெற்றியில் அன்பு முத்தமிட்டு, மீனாட்சி அம்மன் பிரசாதத்தை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். பின்பு தாய், தந்தையின் விருப்பத்தின்படி மாமன் முறைக்கான மோதிரத்தை அணிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.