நெல்லை பாபநாசம் ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கால்நடைகளை மேய்க்க வனத்துறை தடை விதித்துள்ளது.
முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சேர்வலாறு, காரையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன.
இங்கு வளர்க்கப்படும் கால்நடைகளால் வன விலங்குகளுக்கு ஒட்டுண்ணி தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆர்வலர்லள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வனப்பகுதிகளில் கால் நடைகள் வளர்ப்பதை நிறுத்த வேண்டும் என வீடு வீடாக சென்ற நோட்டீஸ் வழங்கிய வனத்துறையினர், எச்சரிக்கையை மீறினால் வழக்குப்பதிவு செய்து கால்நடைகள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.