திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுவனுக்கு கட்டாயப்படுத்தி மது கொடுத்து விவகாரத்தில் தப்பியோடிய தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சியை சேர்ந்த சிறுவன் ஒருவன் மது குடிக்கும் வீடியோ முகநூலில் வேகமாக பரவியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மது குடிக்கும் வீடியோவை முகநூலில் பதிவுசெய்த சிறுவனின் சித்தப்பாவை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தந்தையே தனது மகனுக்கு மது ஊற்றிக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள சிறுவனின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.