விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உடல் உறுப்புகளை தானம் செய்த நபரின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகாசியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த 17ஆம் தேதி சாலை விபத்தில் படுகாயமடைந்தார். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார் மூளைச்சாவு அடைந்ததால், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர்.
இதனை தொடர்ந்து முத்துக்குமாரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இந்நிலையில், சிவகாசியில் முத்துக்குமார் உடலுக்கு அரசு சார்பில் சார் ஆட்சியர் பிரியா, வட்டாட்சியர் லட்சமி ஆகியோர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.