ஒலிம்பிக் ஈட்டி எரிதல் வீரர் நீரஜ் சோப்ராவின் திருமண விழா எளிமையான முறையில் நடைபெற்றது. 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தினார்.
அத்துடன் கடந்தாண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலும் வெள்ளிப் பதக்கம் வென்றார். இந்நிலையில், அவர் டென்னிஸ் வீராங்கனை ஹிமானி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நீரஜ் சோப்ரா, தனது வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளேன் எனவும் இந்த தருணத்தில் தங்களை ஒன்றிணைத்த ஒவ்வொரு ஆசீர்வாதத்திற்கும் நன்றி எனவும் கூறியுள்ளார்.