ஜம்மு காஷ்மீர் சோஜிலா பாஸ் பகுதியில் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.
ஜம்மு- காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது.
இதனால், சாலையே தெரியாத அளவுக்கு பனிக்கூட்டம் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. போக்குவரத்தை சீர்செய்யும் வகையில் வாகனம் மூலம் பனிக்கட்டிகள் அகற்றப்பட்டன.