அசாம் மாநிலத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. போதை பொருட்களை கடத்தியதாக ஒருவரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
அசாம் மாநிலம் காச்சர் மாவட்டத்திற்கு உட்பட்ட சோதனை சாவடி வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில், அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமாக வந்த வாகனத்தை சோதனை செய்தனர்.
அப்போது அந்த வாகனத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப் பொருட்களைக் கடத்தி வந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.