சக மாணவர்கள் ப்ராங்க் செய்ததில் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்லூரி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் 2 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் ராக்கியாபாளையம் அடுத்த பச்சையப்பன் நகர் பகுதியை சேர்ந்த சத்யநாராயணன், கோவை தனியார் கல்லூரியில் பயின்று வந்தார்.
உடன் பயின்று வந்த மாணவர்கள் ப்ராங்க் செய்ததால் மன உளைச்சலுக்கு ஆளான சத்யநாராயணன், கடந்த 3-ஆம் தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர், வகுப்பு ஆசிரியைக்கு அனுப்பிய ஆடியோ தற்போது வெளியாகி உள்ளது.