ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், அக்கட்சியை சேர்ந்த செந்தில் முருகன் என்பவர் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து செந்தில் முருகனை கட்சியிலிருந்து நீக்கி அதிமுக தலைமை உத்தரவிட்டது. இந்நிலையில் செந்தில்முருகன் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.