கேரள மாநிலம் வயநாட்டில் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியை, காட்டு யானை ஆக்ரோஷத்துடன் விரட்டிய பதைபதைக்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
திருநெல்லி கோயிலுக்கு செல்லும் வனப்பகுதி வழியே குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தம்பதியினர் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திடீரென வனப்பகுதியில் இருந்து காட்டு யானை வெளியேறியதை கண்ட தம்பதியினர் செய்வதறியாது வாகனத்தை நிறுத்தினர். ஆனால் காட்டு யானை மிக அருகில் வந்ததால் அச்சமடைந்த அவர்கள் வாகனத்தை மீண்டும் இயக்கினர்.
அப்போது காட்டு யானை அவர்களை துரத்த தொடங்கியது. உடனடியாக சுதாரித்துக்கொண்ட அவர்கள், வாகனத்தை வேகமாக இயக்கிச்சென்று உயிர் தப்பினர்.