அமெரிக்காவில் நியூ ஜெர்சி உள்ளிட்ட பெரும்பாலான மாகாணங்களில் பனிப்புயல் எச்சரிக்கை காரணமாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியாவில் பற்றியெரிந்த காட்டுத் தீ ஓரளவு கட்டுக்குள் வந்த நிலையில், நியூ ஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. இதனால் பனி மலையில் குவிந்த அமெரிக்கர்கள், பனிச்சறுக்கு விளையாடி இன்பமாக பொழுதைக் கழித்தனர்.
தீவிர பனிப்புயல் காரணமாக நியூ ஜெர்சி உள்ளிட்ட மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்கும் சூழலில், நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே நியூஜெர்சியில் பனிப்பொழிவு அதிகரித்ததால் விமான சேவையும் தடைபட்டது. ஓடுபாதையில் விமானங்கள் பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்டன.
மேலும் பனிப்புயல் காரணமாக வீதியெங்கும் வெண்போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கின்றன. வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு பனிக்கட்டிகளால் சூழப்பட்டுள்ளன. விமானத்தின் மேற்பரப்பிலும் பனிப் படர்ந்து காணப்படுகிறது. வீதியில் சேகரமான பனிக்கட்டிகள் வாகனம் மூலம் அகற்றப்பட்டன.