சாலைகளில் சுற்றித் திரியும் நாட்டு இன மாடுகளை அரவணைத்து, தமிழகம் முழுவதும் உள்ள தங்களது மனைப்பிரிவு வளாகத்தில் கோசாலை அமைத்து பராமரிக்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நகர்ப்புற விரிவாக்கம் காரணமாக வீடுகளில் கால்நடை வளர்ப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதை தடுக்கும் விதமாக ஜி-ஸ்கொயர் நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தங்களின் மனைப் பிரிவுகளில் கோசாலை அமைத்துள்ளது.
இந்த கோசாலையில், பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்று சுற்றித்திரிந்த மாடுகளை ஆரோக்கியமாக பராமரித்து வருகின்றனர். ஜி-ஸ்கொயர் நிறுவனத்தின் இந்த முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.