தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ஆட்டோ மீது செங்கல் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் 12 ஆம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பொம்மிநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஆசிரியை மற்றும் மாணவர்கள் சென்ற ஆட்டோ மீது லாரி மோதியது.
இதில் ஈஸ்வரன் என்ற மாணவர் உயிரிழந்த நிலையில், பள்ளி ஆசிரியை மற்றும் 2 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
















