மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையம் ஓடையில் கழிவுநீர் கலப்பதை தடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டத்தில் வெளியேறும் கழிவுநீர் மோத்தேபாளையம் பகுதி நீரோடையில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் அறிவித்திருந்த நிலையில், நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்த பொதுமக்கள், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை வலியுறுத்தினர்