திரிபுரா, மேகாலயா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், திரிபுரா மக்களுக்கு அவர்களின் மாநில தின நல்வாழ்த்துக்கள். தேசிய முன்னேற்றத்திற்கு இந்த மாநிலம் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறது. அதன் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கும் பெயர் பெற்றது. திரிபுரா தொடர்ந்து வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டட்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேகாலயா அதன் இயற்கை அழகு மற்றும் மக்களின் கடின உழைப்புத் தன்மைக்காகப் போற்றப்படுகிறது. வரும் காலங்களில் மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்காகப் பிரார்த்திப்பதாக பிரதமர் கூறியுள்ளர்.