புதுக்கோட்டை சத்தியமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வரும் கல்குவாரிக்கு எதிராக புகார் தெரிவித்தவர்கள், தங்களுக்கு பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
சத்தியமங்கலம் பகுதியில் அனுமதியின்றி கல்குவாரிகள் செயல்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்தவர்கள் பவுன்ராஜ் என்பவர் தலைமையில் சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர்.
இதனிடையே, சட்டவிரோத கல்குவாரி குறித்து புகார் தெரிவித்த ஜகுபர் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார். எனவே, தங்களுக்கும் ஆபத்து வருமோ என கருதிய பவுன்ராஜ் உள்ளிட்டோர், பாதுகாப்பு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் மனு அளித்தனர்.