சென்னை ஈசிஆரில் உள்ள விஜிபி விளையாட்டு திடலில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
அமைந்தகரை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள பிரபல விளையாட்டு தலமான விஜிபி-க்கு நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் நீலாங்கரை காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பாலியல் தொல்லை கொடுத்த சுரேந்தர் என்பவரை கைது செய்தனர்.