யார் இந்த ஹிமானி மோர்? : ஒலிம்பிக் நாயகனை கரம் பிடித்த சோனிபட் மங்கை - சிறப்பு தொகுப்பு!
Jul 26, 2025, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யார் இந்த ஹிமானி மோர்? : ஒலிம்பிக் நாயகனை கரம் பிடித்த சோனிபட் மங்கை – சிறப்பு தொகுப்பு!

Web Desk by Web Desk
Jan 22, 2025, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நட்சத்திர ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா திருமணம் பெரிய ஆடம்பரங்களின்றி இருவீட்டார் முன்னிலையில் நடந்து முடிந்த நிலையில், அவரை கரம் பிடித்துள்ள ஹிமானி மோர் யார் என்பது பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதுபற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

ஈட்டி எறிதல் போட்டியில் டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கம், பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி என இந்திய நாட்டிற்காக இரு ஒலிம்பிக் பதக்கங்களை வென்று தந்த பெருமைக்குரியவர் நீரஜ் சோப்ரா.

உலக தடகள சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் தங்க பதக்கங்களை வென்றுள்ளார். அண்மையில் ஹிமானி மோர் என்பவரை மணந்த இவர், தனது வாழ்வில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறார்.

நீரஜ் சோப்ரா சமூக வலைதளத்தில் பகிர்ந்த திருமண புகைப்படங்களால் இவர்களின் திருமண பந்தம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், “இந்த தருணத்தில் எங்களை ஒன்றிணைத்த அனைத்து ஆசிர்வாதங்களுக்கும் நன்றி; அன்பால் பிணைக்கப்பட்டிருக்கிறேன்” எனவும் தனது பதிவில் நீரஜ் சோப்ரா குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து நாடு முழுவதும் உள்ள நீரஜ் சோப்ராவின் ரசிகர்கள், மணமக்கள் இருவருக்கும் தங்கள் அன்பையும், வாழ்த்துகளையும் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே யார் இந்த ஹிமானி மோர் என நீரஜ் சோப்ராவின் ரசிகர்கள் பலர் எழுப்பிய கேள்விக்கு விடையாக, அவர் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஹரியானா மாநிலத்திலுள்ள சோனிபட் நகரைச் சேர்ந்தவர் ஹிமானி.

‘MIRANDA HOUSE’ என்று அழைக்கப்படும் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த இவர், அரசியல் அறிவியல் மற்றும் உடல்கல்வியில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

டென்னிஸ் வீராங்கனையான இவர் டெல்லி பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, 2017-ல் நடந்த உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் பங்கேற்றார்.

தேசிய அளவிலான டென்னில் போட்டிகளில் விளையாடியுள்ள ஹிமானி மோர், கடந்த 2018-ம் ஆண்டுக்கான அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் தரவரிசை பட்டியலில், ஒற்றையர் பிரிவில் 42-வது இடத்திலும், இரட்டையர் பிரிவில் 27-வது இடத்திலும் இருந்தார்.

தேசிய அளவில் விளையாடத் தொடங்கிய அதே ஆண்டில் ஹிமானி தரவரிசை பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்திற்கு முன்னேறியது, அந்த விளையாட்டில் அவர் காட்டிய முனைப்பை அனைவருக்கும் வெளிச்சமிட்டு காட்டியது.

உடல்கல்வியில் ஹிமானிக்கு இருந்த ஆர்வம் அவரை அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றது. அங்குள்ள தென்கிழக்கு லூசியானா பல்கலைக்கழகத்தில் பயின்ற ஹிமானி, விளையாட்டு மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றார்.

தொடர்ந்து பிராங்கிளின் பியர்ஸ் பல்கலைக்கழகத்தில் இருந்து விளையாட்டு மற்றும் உடல்தகுதி நிர்வாகம், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளில் MBA பட்டங்களை பெற்றார். தற்போது ISENBERG SCHOOL OF MANAGEMENT-ல் அறிவியல் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் ஹிமானி, மசாசுசெட்ஸில் உள்ள ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் பட்டதாரி உதவியாளராகவும் பணியாற்றி வருகிறாராம்.

Tags: Neeraj Chopra's weddingjavelin thrower Neeraj Chopra'Himani MoreMIRANDA HOUSE'
ShareTweetSendShare
Previous Post

எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மத்திய பட்ஜெட் 2025 : ஜவுளித்துறையை ஊக்குவிக்கும் புதிய அறிவிப்புகள் வெளியாகுமா? – சிறப்பு தொகுப்பு!

Next Post

ஞானசேகரனுக்கு வலிப்பு – ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதி!

Related News

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies