அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி சாதாரண வெற்றி அல்ல என்றும், மனித நாகரிகத்தின் எதிர்காலத்தை ட்ரம்ப் சாத்தியமாக்கியுள்ளார் எனவும் டெஸ்லா நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி எலன் மஸ்க் புகழாரம் சூட்டியுள்ளார்.
வாஷிங்டனில் உள்ள கேபிட்டால் உள் அரங்களில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் தொழிலதிபர் எலன் மஸ்க் கலந்து கொண்டார். பின்னர், மேடையில் ஏறி தனது கைகளை உயர்த்தி ட்ரம்ப் ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தினார்.
பின்னர் பேசிய அவர், தமது இதயம் மகிழ்ச்சியில் திளைப்பதாக கூறினார். மனித நாகரிகத்தின் பாதையில் இருந்த முள்கரண்டியை அகற்றி வெற்றியை சாத்தியமாக்கிய ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். இதனிடையே, மேடையில் எலன் மஸ்க் கைகளை அசைத்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.