கடையநல்லூர் அருகே அசுர வேகத்தில் சென்ற ஆட்டோ சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பெரிய தெருவில் அசுர வேகத்தில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதன் ஓட்டுநர், முன்னால் சைக்கிளில் சென்ற சிறுவனை விளையாட்டுக்காக அடிக்க முயன்றுள்ளார்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ வீட்டு வாசலில் கவிழந்து விபத்துக்குள்ளானது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து ஆட்டோவை தூக்கி நிறுத்தினர். இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலானது.