நீலகிரி மாவட்டம், பந்தலூரில் இரவு நேரத்தில் திடீரென நுழைந்த இரண்டு காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
பந்தலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் உணவு தேடி அவ்வப்போது காட்டு யானைகள் உலா வருவது வழக்கம். இந்நிலையில், பந்தலூர் பஜார் மைய பகுதியில் உள்ள பூங்காவிற்குள் 2 காட்டு யானைகள் நுழைந்துள்ளன.
இதனைக் கண்டு அச்சமடைந்த பொதுமக்கள் கூச்சலிட்டதால், 2 யானைகளும் அருகே உள்ள பாக்கு தோப்பில் தஞ்சமடைந்தன. நீண்ட நேரம் அந்த பகுதியில் உலா வந்த 2 யானைகளும் பின்னர் வேறு பகுதிக்கு சென்றுள்ளன.
இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்கு விரட்டவேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.