தெலங்கானா மாநிலம் நாராயண பேட்டையில் அவசர கதியில் சாலையில் கடக்க முயன்ற பெண் அரசு பேருந்து மோதி உயிரிழந்தார்.
கர்னூலில் இருந்து நாராயண பேட்டை நோக்கி அரசு பேருந்து சென்றுகொண்டிருந்தது. சிங்காரம் சந்திப்பு அருகே பேருந்து சென்றபோது, பெண் ஒருவர் அவசர கதியில் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அவர் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.