ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
ஈரோடு கிழக்குத்தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஈரோட்டில் போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தேர்தல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை உணர்த்தும் விதமாகவும், மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் முத்துகுமரன் தலைமையில் நடைபெற்ற அணிவகுப்பில் 140 பேர் கலந்துகொண்டனர்.