அரியலூரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தா.பழூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்தனர்.
இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்தன. 500 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சரிந்து சேதமடைந்ததால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், அரசு தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.