தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுகவின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில், சேலை வழங்குவதாக கூறி அழைத்து வந்து பெண்களை திமுக நிர்வாகிகள் ஏமாற்றிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
சங்கரன்கோவில் மேல ரத வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு உரையாற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதை நம்பி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கூட்டத்துக்கு வருகை தந்தனர்.
இரவு வரை கூட்டம் நடைபெற்ற நிலையில், ஆர்.எஸ். பாரதி உரையை முடிந்தவுடன் நிர்வாகிகள் அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியே சென்றனர்.
சேலை வழங்கப்படாததால் ஏமாற்றமடைந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் திமுகவை வசைபாடியபடியே திரும்பிச் சென்றனர்.