நெல்லையில் உள்ள கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்துக்கு வெளியிடங்களில் இருந்து பல்வேறு பறவைகள் வரத் துவங்கியுள்ளன.
அரசு அங்கீகாரம் பெற்று பாதுகாக்கப்பட்டு வரும் இந்த சரணாலயத்துக்கு இனப்பெருக்க காலத்தின்போது வெளிநாட்டு பறவைகள் வருகைபுரிவது வழக்கம்.
அந்த வகையில், செங்கால் நாரை, பூ நாரைகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வருகை தந்துள்ளன. இவை இனப்பெருக்க காலம் முடிந்து ஆகஸ்ட் மாதத்தில் தங்கள் நாடுகளுக்கு திரும்புகின்றன.