கத்திக்குத்து தாக்குதலில் படுகாயம் அடைந்த நடிகர் சைஃப் அலிகான் சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென புகுந்த நபரால் கடந்த 16-ம் தேதி சைப் அலிகான் கத்தியால் குத்தப்பட்டார். 6 முறை கத்தியால் குத்தப்பட்டு படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சைப் அலிகான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சைஃப் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரது வீட்டுக்கு வெளியே போலீசார் பாதுகாப்பு காப்பு போடப்பட்டுள்ளது.