நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் கனமழையால் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
நாகையில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் பெய்த தீடீர் மழை காரணமாக, கீழ்வேளூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன.
அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் சேதமடைந்ததால் வேதனையடைந்த விவசாயிகள், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.