அவதூறு வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி டி.ஐ.ஜி. வருண் குமார் குறித்தும், அவரது குடும்பத்தினர் பற்றியும் சமூக வலைதளங்களிலும், பொது வெளியிலும் சீமான் அவதூறாக பேசியதாக மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வருண்குமார் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் எண் 4 -ல் விசாரணைக்கு வந்தபோது டி.ஐ.ஜி. வருண்குமார் நேரில் ஆஜராகி சீமான் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக வாக்குமூலம் அளித்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாரணையை பிப்ரவரி 19 -ஆம் தேதிக்கு நீதிபதி பாலாஜி ஒத்திவைத்தார்.
மேலும், அன்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.