குத்தாலம் பேருந்து நிலையம் அருகே இந்துசமய அறநிலையத்துறையை கண்டித்து அடிமனை பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோயில் மனைகளில் குடியிருப்போர் மற்றும் சிறு வணிகம் செய்வோர்களிடம், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் அதிக வாடகை வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், அதிகாரிகளின் இந்த போக்கை கண்டித்து, குத்தாலம் பேருந்து நிலையம் அருகே, தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் வணிகர்கள் தங்களது கடைகளை அடைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அடிமனை விவகாரத்தில் உள்ள குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.