சென்னை மதுரவாயல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.
மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது கழிப்பிடம் இருந்து வந்தது. இந்தக் கழிப்பிடம் தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பொதுக் கழிப்பிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுக் கழிப்பிடத்தை இடித்து அகற்றினர்.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பிடம் சுடுகாடு அருகில் இருப்பதாகவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.