மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தின விழா, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் ஒவ்வொரு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.
முன்னதாக மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி,
ஒவ்வொரு மாநிலங்களுக்கான தினங்களும் அரசு விழாவாக கொண்டாடப் பட வேண்டும் என வலியுறுத்தினார்.
மணிப்பூர் மக்களிடையே ஆங்கிலேயர்கள் பிரிவினை வாதத்தை விதைத்ததாக அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் விளங்குவதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.