மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
டி. குப்பன் எழுதிய நூல் வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் ரயில் ஹவுஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பசுமை தாயக அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சௌமியா அன்புமணி, மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும், சென்னையில் இருக்கக்கூடிய சதுப்பு நிலங்களை கண்டறிந்து அவைகளை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.