பழனி பேருந்து நிலையத்தில், கட்டண கழிப்பறை ஒப்பந்ததாரர்களுக்கு ஆதரவாக செயல்படும் நோக்கில் இலவச கழிப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி பேருந்துநிலையத்தில் நகராட்சி சார்பில் 5 கழிப்பறைகள் கட்டப்பட்டு, அவற்றில் 4 கழிப்பறைகள் இலவசமாகவும், ஒன்று மட்டும் ஓப்பந்த அடிப்படையில் கட்டண கழிப்பறையாகவும் செயல்பட்டு வருகிறது.
ஆனால், இலவச கழிப்பறைகள் இரண்டு மூடப்பட்டுள்ளதுடன், ஒரு இலவச கழிப்பறை பராமரிப்பின்றி கிடக்கிறது. இதனால், கட்டண கழிவறையை பக்தர்கள் பயன்படுத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, மூடப்பட்டுள்ள இலவச கழிப்பறைகளை உடனடியாக திறக்கவேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.