கர்நாடகாவில் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட கோர விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் 25 பேருடன் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு சென்ற லாரி வழியில் விபத்தில் சிக்கியது. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மீட்பு படையினர் துரிதமாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 15 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.