சென்னையில் பூஞ்சை படர்ந்த கெட்டுப் போன கேக் கொடுத்த விவகாரத்தில், தனியார் பேக்கரி கடைக்காரர் அலட்சியமாக பதிலளிப்பதாக பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டியுள்ளார்.
புது வண்ணாரப் பேட்டை பகுதியை சேர்ந்த கோபி என்பவர், தான் வேலையும் தனியார் மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்காக தனியார் பேக்கரியில் இருந்து கேக் வாங்கியுள்ளார்.
கேக்கில் இருந்து துர்நாற்றம் வீசியதுடன், அதனை சாப்பிட்ட 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.
பூஞ்சை படர்ந்த கெட்டுப் போன கேக் கொடுத்தது குறித்து அலட்சியமாக பதிலளிக்கும் கடைக்கார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.