அமெரிக்காவுக்கு சீனா போதை மருந்து விநியோகிப்பதாக குற்றம்சாட்டிய அதிபர் டொனால்ட் டிரம்ப், அந்நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் பத்து சதவீதம் வரிவிதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
சீனாவில் உற்பத்தியாகும் ஃபென்டானில் என்ற மருந்து வகை மிகச்சிறந்த வலி நிவாரணியாக செயல்பட்டாலும், அளவுக்கு மீறினால் போதை ஏற்படுத்தும் நஞ்சாகவும் மாறிவிடுகிறது.
மெக்ஸிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழையும் ஃபென்டானிலை பயன்படுத்தி, ஏராளமான அமெரிக்கர்கள் உயிரிழந்தனர்.
இதைத் தீவிரமாக கருதிய டிரம்ப், ஃபென்டானில் இறக்குமதியை தடுக்க தவறினால், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் சீன இறக்குமதி பொருட்களுக்கு பத்து சதவீதம் வரிவிதிக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.