சென்னையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது.
ஈவெரா குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றஞ்சாட்டி, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை ஈவெரா அமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கணக்கானோர் அங்கு திரண்டனர். இதனால் பதற்றமான சூழல் நிலவிய போதிலும், மறுபுறம் நாம் தமிழர் கட்சித் தொண்டர்களுக்காக சீமான் வீட்டில் தடபுடலாக விருந்து தயாரானது.
இதற்காக சமையல் கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு சுமார் ஆயிரம் பேருக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி செய்து விநியோகிக்கப்பட்டது. இதேபோல காலையிலும் நாம் தமிழர் கட்சியினருக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.