கும்பகோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த ஆறு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நீலத்தநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சத்யா, ஜித்தா, சங்கவி, தர்ஷினி, ஸ்ரீராம், ஹாஷினி ஆகிய குழந்தைகளுக்கு, வாந்தி, பசியின்மை உள்ளிட்ட காரணங்கள் கடும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, உடல் நலம் பாதிக்கப்பட்ட 6 பேரும் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குழந்தைகள் எத்தகைய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிய பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், தற்போது அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர் செல்வகுமார் தெரிவித்தார்.
இதனிடையே நீலத்தநல்லூர் தெற்கு தெருவில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத் துறையினர், அங்குள்ள குழந்தைகளின் உடல் நல குறைபாடுகள் குறித்து கேட்டறிந்தனர். மூன்று குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது உறுதியானதால், அவர்களது ரத்த மாதிரியும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.